Sunday, 12 July 2015

நண்டு குழம்பு

செட்டிநாடு ஸ்டைல் நண்டு குழம்பு சுவைத்ததுண்டா? ஆம், செட்டிநாடு ரெசிபிக்களில் நண்டு குழம்பும் உள்ளது. இது மிகவும் சுவையானது மற்றும் நன்கு காரசாரமாகவும் இருக்கும். மேலும் இது சாதத்துடன் சேர்த்து சாப்பிட ஏற்றவாறும் இருக்கும். அதுமட்டுமின்றி, நண்டு மிகவும் ஆரோக்கியமானதும் கூட. எனவே விடுமுறை நாட்களில் இதனை தவறாமல் செய்து சுவைத்துப் பாருங்கள். சரி, இப்போது செட்டிநாடு ஸ்டைல் நண்டு குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! 


 
 
தேவையான பொருட்கள்: 
 
நண்டு - 1/2 கிலோ 
வெங்காயம் - 2 (நறுக்கியது) 
தக்காளி - 2 (நறுக்கியது) 
சீரகம் - 1 டீஸ்பூன் 
சோம்பு - 1 டீஸ்பூன் 
பூண்டு - 5 பல் 
மிளகு - 1 டீஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் 
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் 
மல்லித் தூள் - 3 டீஸ்பூன் 
கொத்தமல்லி - சிறிது 
கறிவேப்பிலை - சிறிது 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு 
 
செய்முறை: 
 
முதலில் நண்டை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின்பு மிக்ஸியில் சீரகம், சோம்பு, பூண்டு மற்றும் மிளகு போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். 
 
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பிறகு அதில் அரைத்து வைத்துள்ள சோம்பு, மிளகு கலவை சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். 
 
அடுத்து, அதில் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். தண்ணீர் நன்கு கொதித்ததும், அதில் கழுவி வைத்துள்ள நண்டு சேர்த்து மூடி வைக்க வேண்டும். 
 
நண்டு நன்கு வெந்த பின், அதில் கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலையைத் தூவி இறக்கினால், செட்டிநாடு நண்டு குழம்பு ரெடி!!!

சில்லி பன்னீர் ...

பன்னீர் பிரியர்களுக்கு ஒரு அருமையான மற்றும் காரசாரமான சைனீஸ் ஸ்டைல் ரெசிபி ஒன்றை தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது. அது தான் சில்லி பன்னீர். இந்த சில்லி பன்னீர் மிகவும் ஈஸியான செய்முறையைக் கொண்டிருப்பதுடன், அருமையான சுவையையும் கொண்டது. அந்த சில்லி பன்னீர் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள ஆசையா? அப்படியானால் தொடர்ந்து படித்து பாருங்கள். 


 
 
தேவையான பொருட்கள்: 
 
 
பன்னீர் - 500 கிராம் 
சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன் 
பூண்டு - 5 பற்கள் 
வெங்காயம் - 2 (நறுக்கியது) 
குடைமிளகாய் - 2 (நறுக்கியது) 
பச்சை மிளகாய் - 4 (நீளமாக கீறியது) 
வெஜிடேபிள் ஸ்டாக் - 1/2 கப் 
சோயா சாஸ் - 2 டேபிள் ஸ்பூன் 
சில்லி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன் 
தக்காளி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன் 
அஜினமோட்டோ - 1 சிட்டிகை 
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு 
 
 
செய்முறை: 
 
 
முதலில் ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் சோள மாவு, உப்பு, மிளகு தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து கெட்டியான பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். 
 
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பன்னீர் துண்டுகளை சோள மாவில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து, ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 
 
பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டுகளை தட்டிப் போட்டு சிறிது நேரம் வதக்கி, பின் அதில் வெங்காயம் மற்றும் குடைமிளகாயை சேர்த்து, மிதமான தீயில் பொன்னிறமாக வதக்க வேண்டும். 
 
பின்பு அதில் பச்சை மிளகாய், வெஜிடேபிள் ஸ்டாக் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும். பின் அஜினமோட்டோ, சோயா சாஸ், தக்காளி சாஸ், சில்லி சாஸ் சேர்த்து 3-4 நிமிடம் கிளறி விட வேண்டும். 
 
பிறகு ஒரு டேபிள் ஸ்பூன் சோள மாவை, 1/4 கப் தண்ணீரில் கலந்து, அதனை வாணலியில் ஊற்றி 4-5 நிமிடம் தண்ணீர் வற்றும் வரை கிளறி விட வேண்டும். 
 
இறுதியில் அதில் பொரித்து வைத்துள்ள பன்னீர் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், காரமான சில்லி பன்னீர் ரெடி!!!

Saturday, 4 April 2015

இறால் வடை


தேவையான பொருள்கள் :
 
இறால் - 10
உடைத்த கடலை - ஓரு ஆழாக்கு
பச்சை மிளகாய் - 5
வெங்காயம் - 200 கிராம்
சோம்பு - 1 தேக்கரண்டி (5 கிராம்)
பூண்டு - 5 பல்
இஞ்சி - சிறிய துண்டு
கறிவேப்பிலை -1 மேஜைக்கரண்டி
கடலை எண்ணெய் - 400 கிராம்
மஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
 
செய்முறை :
 
முதலில் இறாலை உரித்து சுத்தம் செய்து அதில் பாதி அளவு உப்பையும், மஞ்சள் பொடியையும் கலந்து 1 கோப்பை தண்ணீரில் வேக வைக்கவும். பின்னர் வேக வைத்த இறாலை நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
 
மேலும் உடைத்த கடலையை சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பின் இஞ்சி, பூண்டு, சோம்பு ஆகியவற்றை நசுக்கிக் கொள்ள வேண்டும். 
 
அடுப்பில் வாணலியை வைத்து, 400 கிராம் எண்ணெய் விட்டு, நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், நசுக்கி வைத்துள்ள மசாலா ஆகியவற்றை அதில் போட்டு சிவக்கும் வரை வதக்க வேண்டும். 
 
வெங்காயம் சிவந்து மணம் வந்தவுடன், அரைத்து வைத்துள்ள இறாலையும் உடைத்த கடலையையும் அதில் சேர்த்து எல்லாவற்றையும் ஒன்றாகப் பிசைந்து கொள்ள வேண்டும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ளதை சிறு வடைகளாகத் தட்டி எண்ணெயில் போட்டு சிவக்க வைத்து எடுத்து விட வேண்டும்.
 
இறால் வடை தயார்.

Tuesday, 13 January 2015

சுவை கிளப்பும் மீன் குழம்பு

எப்போதும் சிக்கன், மட்டன் செய்து சாப்பிட்டு போர் அடித்திருந்தால், இந்த வார இறுதியில் தக்காளி மீன் குழம்பு செய்து சுவைத்துப் பாருங்கள். இந்த மீன் குழம்பானது மிகவும் சுவையாகவும், காரமாகவும் இருக்கும்.

Paneer Tomato Curry

தக்காளி மீன் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:

மீன் – 6-7 துண்டுகள்
மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி – 6 (அரைத்தது)
சீரகப் பொடி – 1
பூண்டு – 6-8 பற்கள்
கறிவேப்பிலை – சிறிது
வெங்காயம் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிது
புளி – 1 எலுமிச்சை அளவு
தேங்காய் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

தக்காளி மீன் குழம்பு செய்முறை:

முதலில் மீன் துண்டுகளை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின் அதில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி, 5 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு அகலமான மற்றும் தட்டையான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் கறிவேப்பிலையை சேர்த்து வறுத்து, பின் அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

பின்பு அதில் வெங்காயத்தை சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்கி, பின் சீரகப் பொடி மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.

பிறகு அதில் அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து, 8-10 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும். அதில் மிளகாய் தூள் சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

பின் அதின் மீன் துண்டுகளை சேர்த்து, குறைவான தீயில் மூடி வைத்து 10 நிமிடம் மீனை வேக வைக்க வேண்டும். மீனானது நன்கு வெந்ததும், அதில் புளிச்சாறு சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி கொத்தமல்லியைத் தூவிவில்லால் காரமான தக்காளி மீன் குழம்பு தயார்.

முருங்கைக்கீரை சாம்பார்

முருங்கைக்கீரையில் சாம்பார் தயார் செய்ய தேவையான பொருட்கள் வருமாறு:-

 Drumstick Leaves Sambar

முருங்கைக்கீரை- 2 கோப்பை அளவு,
துவரம் பருப்பு- 150 கிராம்,
தக்காளி- 4,
வெங்காயம்-5,
பச்சை மிளகாய்-3,
சாம்பார் பொடி- தேவையான அளவு,
பூண்டு- சிறிதளவு,
தேங்காய் துருவல்- சிறிதளவு,
மஞ்சள்- சிறிதளவு,
சீரகம், கடுகு, உளுந்தம் பருப்பு- தலா ஒரு தேக்கரண்டி,
சமையல் எண்ணெய், மிளகாய் வத்தல், உப்பு- தேவையான அளவு.

செய்முறை:- 

• கீரையை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
• அடுப்பில் வாணலியை வைத்து, தேவையான தண்ணீரில் பருப்பை வேகவிட வேண்டும்.
• வெங்காயம், தக்காளி, மிளகாயை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
• தேங்காய் துருவல், வத்தல், பூண்டு, சீரகம், மஞ்சள் ஆகியவற்றை அம்மியில் அரைத்து, விழுதாக எடுத்துக் கொள்ளவும்.
• பருப்பு வெந்த பின்னர், அதை நன்றாக கிளறி விட்டுக்கொண்டே கீரையை அதில் போட வேண்டும்.
• கீரையும், பருப்பும் வெந்த பின்பு, சாம்பார்பொடியை போட வேண்டும். அரைத்த விழுதையும், போட்டு நன்றாக கலக்கவும்.
• தேவையான உப்பு சேர்த்து, நறுக்கிய வெங்காயம், தக்காளி, மிளகாய் போட்டு மூடி வைத்திட வேண்டும். மீண்டும் ஒரு கொதி நிலைக்கு வந்ததும், மூன்று முறை தொடர்ந்து கிளறி விடுங்கள்.
• மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, சாம்பாருடன் சேர்த்தால், முருங்கைக்கீரை சாம்பார் தயார் ஆகிவிடும்.

Friday, 26 December 2014

அகத்திக்கீரை பொரியல்

தேவையான பொருட்கள்:

அகத்திக்கீரை - 1 கட்டு
மிளகாய் வத்தல் - 4
தேங்காய் துருவல் - ½ கப்
வெங்காயம் - 4
பச்சை மிளகாய் - 2
உப்பு, சமையல் எண்ணெய் - தேவையான அளவு


அகத்திக்கீரை பொரியல்

செய்முறை:-

* கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

* அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, எண்ணெயை காய விட வேண்டும். பின்னர் அதில் கீரையை போட்டு நன்றாக வதக்கவும்.

* கீரை நன்றாக வதங்கிய பின்னர், மிளகாய் வத்தலை அதில் கிள்ளிப் போட வேண்டும்.

* வெங்காயம், மிளகாயை அரிந்து போட்டு, மேலும் சிறிது எண்ணெய் விட்டு வதக்கவும். தேவையான உப்பு சேர்த்து, தேங்காய் துருவலையும் போட்டு நன்றாக கிளற வேண்டும். மீண்டும் ஒரு முறை வதங்கிய பின்பு, சரியான பக்குவத்தில் வந்தவுடன் எடுத்து விடலாம்.

இப்போது அகத்திக் கீரை பொரியல் தயார் ஆகிவிடும்.

சுக்கு - மல்லி காபி


தேவையான பொருட்கள் :

சுக்கு காபி பொடிக்கு :

சுக்கு - 1/2 கப்
மல்லி - 1/4 கப்
மிளகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்

சுக்கு காபிக்கு :

தண்ணீர் - 2 கப்
சுக்கு காபி பொடி - 2 டீஸ்பூன்
பனங்கற்கண்டு அல்லது கருப்பட்டி - தேவையான அளவு



செய்முறை:

• முதலில் சுக்கு, மல்லி பொடிக்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைத்து அதனை மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.

• பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும். தண்ணீரானது கொதிக்க ஆரம்பித்ததும், அதில் 2 டீஸ்பூன் சுக்கு பொடியை சேர்த்து, பின் அதில் பனங்கற்கண்டு அல்லது கருப்பட்டி சேர்த்து 7 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும்.

• அதில் உள்ள கற்கண்டு கரைந்ததும், அதனை இறக்கி வடிகட்டினால், சுக்கு மல்லி காபி ரெடி.

• சளி, தொண்டை அடைப்பு போன்றவற்றிற்கு இந்த சுக்கு - மல்லி காபி மிகவும் இதமாக இருக்கும்.